சத்தான உணவுகள் மூலம் கண்களை பாதுகாக்க வேண்டும் சாலை பாதுகாப்பு மாத நிகழ்ச்சியில் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 32-வது சாலை பாதுகாப்பு மாத நிகழ்ச்சியையொட்டி இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 32-வது சாலை பாதுகாப்பு மாத நிகழ்ச்சியின் 12-வது நாளான நேற்று, வட்டார போக்குவரத்துத் துறை மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமை வகித்து, முகாமைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆர்டிஓ வெங்கடேசன் பேசும்போது, ‘‘கண்களை அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக கண்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்,’’ என்றார்.

இதில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், அன்புசெழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்று, வாகன ஓட்டுநர்கள், பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்து, மேல் சிகிச்சை குறித்து ஆலோசனை வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்