கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 7 இடங்களில் மினி கிளினிக் திறப்பு

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 7 இடங்களில் மினி கிளினிக் திறக் கப்பட்டன.

உளுந்தூர்பேட்டை ஒன்றியம் நெய்வானை, திருப்பெயர், அதை யூர், பெரியகுறுக்கை மற்றும் திருநாவலூர் ஒன்றியம் கூவாகம், பரிக்கல், நாச்சியார்பேட்டை ஆகிய கிராமங்களில் மினி கிளினிக்கினை உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் ரா.குமரகுரு தொடங்கி வைத்தார்.

கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் சதீஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மினி கிளினிக்குகளில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் உதவியாளர் என மூவர் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் காய்ச்சல் உள்ளிட்ட சிறு நோய்க ளுக்கு சிகிச்சை அளிப்பர். சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம்ஆகிய நோய்கள் தொடர்பாகபரிசோதனை செய்து பயன்பெற லாம் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

வெண்கரும்பூரில் திறப்பு

கடலூர் மாவட்டம் பெண்ணா டத்தை அடுத்த வெண்கரும்பூர் ஊராட்சியில் மினி கிளினிக் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

திறப்பு விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் செந்தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். அதிமுக மாவட்ட கவுன்சிலர் சுப்ரமணியன், கூட்டுறவு சங்கத் தலைவர் காரைச்செழியன், ஒன்றிய கவுன்சிலர் வள்ளி சந்திரசேகர், ஓய்வு பெற்ற டிஎஸ்பிராஜேந்திரன் முன்னிலை வகித் தனர்.

ஊராட்சி செயலர் சுரேஷ் வரவேற்றார். அதிமுக நல்லூர் தெற்குஒன்றிய செயலர் ராஜேந்திரன் மினி கிளினிக்கை திறந்து வைத் தார். பின்னர், பெண்களுக்கு ஊட் டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

நல்லுார் வட்டார மருத்துவ அலுவலர் தமிழரசன், கணபதி குறிச்சி சுகாதார நிலைய மருத்துவர் தனலட்சுமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், விஜயரங்கன், விக்னேஷ், செவிலி யர்கள், கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஒன்றிய பொருளாளர் சேகர் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்