நெல்லை, குமரியில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாக த்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கீதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் வழங்க வேண்டும். கரோனாவை பொருட்படுத்தாமல் பணியாற் றும் செவிலியர்களுக்கு அரசு அறிவித்த ஒரு மாத ஊக்க ஊதியம், பாதிக்கப்பட்ட செவிலியர்களுக்கு நிவாரணம், உயிரிழந்த செவிலியர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். 6 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப் பட்டன.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில இணைச் செயலாளர் ஜீவா ஸ்டாலின் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முருகன், பொருளாளர் நிர்மலா மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்