விபத்துகளை தடுக்கும் வகையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிக்னலை செயல்படுத்த கோரிக்கை

By செய்திப்பிரிவு

அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அமைக்கப்பட்டுள்ள சிக்னலை செயல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் - பல்லடம் சாலையில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில், மாவட்டஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும், ஆட்சியர் அலுவலக முகப்பில் கோவை, பொள்ளாச்சி வழித்தடங்களுக்கான தற்காலிக பேருந்து நிலையமும் செயல்படுகிறது. முன்பைவிட பொதுமக்கள், வாகனங்கள் வருகை உயர்ந்துள்ள நிலையில், ஆட்சியர் அலுவலக முகப்பில் உள்ள ரவுண்டானாவை பயன்படுத்துவோர் எண்ணிக் கையும் அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே அங்கு அமைக்கப்பட்ட சிக்னல் செயல்பாட்டில் இல்லை. போக்குவரத்து போலீஸாரும் அவ்வப்போது இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன.

இதைத் தடுக்க சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதுடன், போக்கு வரத்து போலீஸார் பணியில் இருப்பதையும் உறுதி செய்ய மாநகர காவல் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்