கடலூர் மாவட்டத்தில் மேலும் 38 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் மேலும் 38 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

திறக்கப்பட உள்ளதாக ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நடப்பு சம்பா பருவத்தில் கடலூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 91 ஆயிரம் ஹெக்டரில் நெல் சாகுபடி செய்து தற்போது அறுவடை தொடங்கியுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலமாக 88 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் 38 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 126 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும். மத்திய அரசு சன்ன ரகத்திற்கு அறிவித்த குறைந்த பட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1,888 உடன் தமிழக அரசு போனஸ் தொகையாக ரூ.70 சேர்த்து மொத்தம் ரூ.1,958 விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதே போன்று மத்திய அரசு சாதாரண ரகத்திற்கு அறிவித்த குறைந்த பட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1,868 உடன் தமிழக அரசு போனஸ் தொகையாக ரூ.50 சேர்த்து மொத்தம் ரூ.1,918 வழங்கப்படும். எனவே சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள்

விளைபொருட்களை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்று பயனடையலாம் என்று தெரிவித்துள்ளார்.

விளைபொருட்களை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்று பயனடையலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்