இறந்த மாட்டுக்கு இழப்பீடு கேட்டு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மாடு வளர்ப்போர் முற்றுகையிட்டனர்.
சிவகங்கை நகராட்சி பகுதியில் வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதையடுத்து பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்தினர் வீதிகளில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து நகர் காவல்நிலையம் அருகே வருவாய்த்துறைக்கு சொந்த பவுண்டில் அடைத்தனர். உரிமையாளர் அபராதம் செலுத்தினால் மட்டும் மாடுகள் விடுவிக்கப்பட்டன.
இந்நிலையில் பவுண்டில் இருந்த ஒரு மாடு திடீரென இறந்தது. இதையடுத்து இழப்பீடு கேட்டு மாடுகளுடன் அதன் உரிமையாளர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
மாட்டின் உரிமையாளர்கள் கூறுகையில்,மாடு இறப்புக்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த மாட்டுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். பவுண்டில் உள்ள மற்ற மாடுகளை விடுவிக்க வேண்டும் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago