மந்தமாக நடக்கும் பாண்டிகோயில் சந்திப்பு மேம்பால பணிகள் தென் மாவட்ட வாகனங்கள் நகருக்குள் வருவதால் நெரிசல்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை பாண்டி கோயில் சந்திப் பில் ரூ.50 கோடி மதிப்பில் கட்டப் படும் ரிங் ரோடு மேம்பாலப் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக மந்தகதியில் நடப்பதால், அப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடருவதோடு, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் அச்சந்திப்பைத் தவி ர்ப்பதற்காக நகருக்குள் வந்து செல்வதால் நகர்ப்பகுதியிலும் நெரிசல் அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் வட மாவ ட்டங்களையும், தென் மாவட் டங்களையும் இணைக்கும் நான்கு வழிச் சாலையும், மதுரை-சிவகங்கை நெடுஞ்சாலையும் சந்திக்கும் பாண்டி கோயில் சந்திப்பு போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்தது.

நான்குவழிச் சாலை வழி யாக மதுரை நகருக்குள் நுழையும் வாகனங்களும், சிவ கங்கை சாலை வழியாக அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு வரும் ஆம்புலன்ஸ்களும் இச்சந்திப்பு வழியாகத்தான் மதுரைக்குள் நுழைந்து வருகின்றன. இங்கு மேம்பாலம் இல்லாததால் அடிக்கடி விபத்துகளும், போக்கு வரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது.

எனவே பாண்டி கோயில் சந்திப்பில் ரூ.50 கோடியில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. இந்த சந்திப்பில் ஏற்கெனவே நான்கு வழிச் சாலைக்காக மிக அகலமாக நெடுஞ்சாலைத் துறையால் விரிவாக்கம் செய்யப்பட்டிருந் ததால், உயர்மட்டப் பாலத்துக்கு நில கையகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. இதனால் எந்தத் தடங்கலும் இல்லாமல் பணிகள் விரைவாக நடைபெறும் என மக்கள் எதிர்பார்த்ததனர்.

ஆனால் பணிகள் மிக மெதுவாக நடப்பதால் பொது மக்கள் வாகனங்களில் இப் பகுதியைக் கடப்பதற்குள் பெரும் சிரமத்தைச் சந்திக்கின்றனர். மாட்டுத்தாவணியில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் இடதுபுறமாக எதிர் திசையில் நான்கு வழிச்சாலையில் சிறிது தூரம் சென்று பிறகு வலதுபுறமாக திரும்பி தென் மாவட்டங்களுக்குச் செல்லும் நான்குவழிச் சாலையில் இணையும் வகையில் போக்குவரத்து மாற்றப் பட்டுள்ளது. பாலப் பணிகள் நடப்பதால் இச்சாலையில் உயர் மட்டப்பாலம் அமைக்கப்படும் 1.8 கி.மீ. தொலைவுக்குக் குழிகள் தோண்டப்பட்டு சரியாக மூடப் படாமல் உள்ளன.

அதனால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி பள்ளம், மேடு தெரியாத நிலை உள்ளது. மற்ற காலங்களில் இப்பகுதியே தூசு மண்டலமாகிவிடுகிறது. பாலப் பணிகள் நடப்பதால் இங்கிருந்த போக்குவரத்து சிக்னலும் அகற்றப்பட்டுள்ளது. இதனால் இச்சாலையைக் கடப்பது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.

மேலும் மாட்டுத்தாவணி பகுதிகளிலிருந்து இச்சந்திப்பு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் இங்கு நிலவும் மோசமான சூழ்நி லையால், மாற்று வழியாக லேக்வியூ சாலை, அண்ணாநகர், தெப்பக்குளம் வழியாக விரகனூர் சந்திப்பில் நான்கு வழிச்சாலையை அடைகின்றன. இதனால் ஏற்கெனவே நெரிசல் மிகுந்த நகரின் இப்பகுதிகள் தற் போது மேலும் கடும் நெரிசலை சந்திக்கின்றன.

நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 65 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டன. முக்கியப் பணிகள் முடிந்துவிட்டதால் விரைவில் பாலம் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்