தமிழகத்தின் வரலாறு இந்தியாவின் வரலாறு என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு மதுரை விமானம் நிலையம் செல்லும் வழியில் நேற்று மாலை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பொதுமக்களிடம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: தமிழகத்துக்கும் எனக்கும் இடையே உணர்வுப்பூர்வமான குடும்ப உறவு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. இந்தியாவை மத அடிப்படையில் நரேந்திர மோடி பிரிக்கிறார். ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்கிறார். தமிழ் மொழி, இந்தியாவின் மொழி அல்லவா. தமிழகத்தின் வரலாறு இந்தியாவின் வரலாறு அல்லவா. யார் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று சொல்வதற்கு நரேந்திர மோடி யார்? இவ்வாறு அவர் கூறினார்.
அதன்பின் வேடசந்தூரில் 1978-ம் ஆண்டு நடந்த விவசா யிகள் போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் பலியான விவசாயிகளின் நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஜோதிமணி எம்.பி., ஆகியோர் உடன் இரு ந்தனர். பின்னர் மதுரை விமான நிலையம் வந்த ராகுல் காந்தியை மாநகர் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் சையது பாபு, எஸ்.எஸ்.போஸ், ராஜா அசைன் உள் ளிட்ட கட்சியினர் வரவேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago