வாக்காளர் பட்டியலில் இந்தியில் பெயர்கள் திண்டுக்கல் ஆட்சியரிடம் திமுக புகார்

By செய்திப்பிரிவு

கடந்த 20-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், நிலக்கோட்டை, சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பெயர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட துணைச்செயலாளர் நாகராஜன் தலைமையிலான திமுகவினர் ஆட்சியர் மு.விஜயலட்சுமியிடம் புகார் தெரிவித்தனர். மேலும், இறந்தவர்கள் பெயர் நீக்கம் செய்யாமலும், பல இடங்களில் ஒரே நபரின் பெயர்கள் இரட்டைப் பதிவாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

அவர்களிடம் பேசிய ஆட்சியர், "கணினி பதிவில் ஏற்பட்ட குளறுபடியால் இதுபோன்று நிகழ்ந்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்து, வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்படும்" என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்