தேசிய வாக்காளர் தின விழா மாணவர்களுக்கு ஆட்சியர்கள் பரிசளிப்பு

திண்டுக்கல்லில் தேசிய வாக்காளர் தின விழா நடை பெற்றது. ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தார். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், பாராட் டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

அனைவரும் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, பயிற்சி ஆட்சியர் விசுவநாதன், திண்டுக்கல் கோட்டாட்சியர் உஷா, தேர்தல் வட்டாட்சியர் சரவணன் உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்தொடங்கி வைத்தார். இப்பேரணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முகக்ிய வீதிகள் வழியாகச் சென்றனர்.

அதன் பின், சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.சிவகாமி, சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, வட்டாட்சியர் முருகவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விருதுநகரில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை ஆட்சியர் இரா.கண்ணன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். அரசு அலுவலர்கள், காவலர்கள் பங்கேற்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மங்களராமசுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், சார் ஆட்சியர் ச.தினேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்