திருப்பத்தூர் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி ஆட்சியர் சிவன் அருள் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

தேசிய வாக்காளர் தினத்தை யொட்டி, திருப்பத்தூரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவி கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி தொடங்கப்பட்டது. இதை சிறப்பிக்கும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி ‘தேசிய வாக்காளர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்கவும், வாக்காளர்களின் வாக்குரிமையின் முக்கியத்துவம் மற்றும் அதன் உரிமையை வாக் காளர்களுக்கு உணர்த்துவதற்காக தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பள்ளி மாணவ, மாணவிகள் சாரண, சாரணியர், அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், எஸ்பி டாக்டர் விஜயகுமார் ஆகியோர் கொடிய சைத்து தொடங்கி வைத்தனர்.

இந்தப் பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, திருப்பத்தூர் பேருந்து நிலையம் வழியாக தூய நெஞ்சக்கல்லூரியை அடைந்தது. பின்னர், அங்கு நடைபெற்ற தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில் ஆட்சியர் சிவன் அருள், எஸ்பி டாக்டர் விஜயகுமார், டிஆர்ஓ தங்கைய்யாபாண்டியன், சார் ஆட்சியர் வந்தனாகர்க் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர், தூய நெஞ்சக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், பள்ளி மாணவர்களுடன் இணைந்து தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்றும், 18 வயது நிரம்பி யவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற விண்ணப்பிக்க வேண்டும் என முழக்கமிட்டவாறு திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி கூட்டுச்சாலை வரை சென்று மீண்டும் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தை அடைந் தனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பேசும் போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். தேர்தலில் வாக்களிப்பது நமது கடமையாகும். திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காகவும், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்பதற்காக இது போன்ற விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்படுகின்றன. எனவே, வாக்காளர்கள் தங்களது கடமைகளை நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து, புகைப்படத் துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் இளம் வாக்காளர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், திருப்பத்தூர் வட்டாட்சியர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல, வாணியம்பாடி அருகேயுள்ள ஜெயின் மகளிர் கல்லூரியில் மாணவிகள் சார்பில் தேசிய வாக்காளர் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதற்கான விழிப்புணர்வு பேரணியை வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, கல்லூரி மாணவிகள் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மாணவிகள் பங்கேற்ற மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வட்டாட்சியர் சிவப்பிரகாகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்