கூடுதல் வகுப்பறை கட்ட அடிக்கல்

By செய்திப்பிரிவு

வடமணப்பாக்கம் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட தூசி கே.மோகன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே வடமணப்பாக்கம் மேல்நிலைப் பள்ளியில் ரூ.52.31 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் ஆய்வக வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்ட தூசி கே.மோகன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.

இதில், ஒன்றிய கவுன்சிலர் கணேஷ், மாவட்ட துணை செயலாளர் துரை, ஒன்றியச் செயலாளர் மகேந்திரன், எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளர் ஜாகிர்உசேன், ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்