குடியரசு தினவிழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

By செய்திப்பிரிவு

குடியரசு தினவிழாவையொட்டி விழுப் புரம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதா னத்தில் நாளை குடியரசு தினவிழா நடைபெறுகிறது.

ஆட்சியர் அண்ணாதுரை தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். குடியரசு தின விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழாவையொட்டி எஸ்பி ராதாகிருஷ்ணன் தலை மையில் 800 போலீஸார் மாவட் டம் முழுவதும் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்தஇரு நாட்களாக மாவட்ட எல்லை களில் உள்ள சோதனைச் சாவடி களில் வாகனத் தணிக்கை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. குடியரசு தினவிழாவையொட்டி, அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் காவல்துறை கட்டுப் பாட்டில் விழுப்புரம் மாவட்டம் கொண் டுவரப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்