பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியார்மயமாக்க முயற்சி மத்திய அரசு மீது தயாநிதிமாறன் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டத்தில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் 4-வது நாளாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் நேற்று பிரச்சாரம் செய்தார். மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ, மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா, மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட தயாநிதி மாறன், வல்லூர் கிராமத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:

மத்தியில் ஆளும் மோடி அரசு டெல்லியில் டிராக்டர் பேரணிக்கு அனுமதி கொடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி டிராக்டர் பேரணிக்கு அனுமதி மறுத்திருப்பது வேடிக்கையாக உள்ளது.

விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தர முதல்வர் பழனிசாமி மறுக்கும் நிலையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு விளம்பரம் கொடுக்கிறார். இது முற்றிலும் மக்களின் வரிப்பணம். தேர்தல் வரும் நிலையில் வரிப்பணத்தை முதல்வர் பழனிசாமி வீணடித்து வருகிறார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இதற்கு உரிய பதிலை மக்கள் தெரிவிப்பார்கள்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியார்மயமாக்க அனைத்து முயற்சிகளையும் மத்தியில் ஆளும் பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கவில்லை. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் முழுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். தொடர்ச்சியாக பிஎஸ்என்எல் நிறுவனத்துக்காக குரல் கொடுப்படும். வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவசாயத்துக்கு எதிராக உள்ள அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்