மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி சார்பில் தேர்தல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பிறகு கட்சி யின் இளைஞரணி மாநிலச் செயலாளர் கவிஞர் சினேகன் செய்தியாளர் களிடம் கூறியது: எங்கள் கட்சியுடன் ஒருமித்த கருத்துள்ள கட்சிகள் இருக்கின்றன. ஆண்ட கட்சிகள், ஆள நினைக்கும் கட்சிகள் ஆகியவற்றில் இருந்து மாற்றத்தை நோக்கி வர நிறைய பேர் தயாராக உள்ளனர். கட்சியின் 4-ம் ஆண்டு தொடக்க விழா அரசின் அனுமதி கிடைத்த பிறகு மிகச் சிறப்பாக நடத்தப்படும் என்றார்.
அப்போது, கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் முகம்மது ஹுசேன், மாநில ஊடக பிரிவு துணைச் செயலாளர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக கலந்தாய்வுக் கூட்டத்தில், கட்சியின் தேர்தல் குழுவுடன் இணைந்து செயலாற்றும் வகை யில் பிரச்சாரப் படை, வாக்குச் சேகரிப்பு படை, வாக்காளர் பாதுகாப்புப் படை, தேர்தல் கண் காணிப்பு பறக்கும் படை ஆகிய குழுக்களை உருவாக்க வேண்டும். தமிழர்களின் நலனை மத்திய அரசிடம் அடமானம் வைத்துக் கொண்டிருக்கும் ஆளுங்கட்சியையும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி உள்ள ஆண்ட கட்சியையும் தேர்தலில் தோற்கடித்து கமல் ஹாசனை முதல்வராக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago