குளித்தலை ஒன்றியக்குழுக் கூட்டத்தில் அரசு அதிகாரிகள் பங்கேற்கவில்லை ஒன்றியத் தலைவர் வருத்தம்

By செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவர் விஜயவிநாயகம் தலைமையில் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

ஆணையர்கள் விஜயகுமார், ராணி, துணைத் தலைவர் இளங் கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக் குழுத் தலைவர் விஜயவிநாயகம் பேசியது: குளித்தலை ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்துக்கு முறையான அழைப்பிதழ் 41 துறை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், மின்வாரியம் மற்றும் மீன் வளத் துறையிலிருந்து மட்டும் அரசு அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். மற்ற துறை அதிகாரிகள் யாரும் வர வில்லை.

மக்கள் மன்றத்தில் தெரிவிக் கப்படும் மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்க அரசு அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அழைப்பிதழ் அனுப்பப்படுகிறது. ஆனால், பெரும்பாலான அரசு அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது வேதனை அளிப்பதாக உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு மன்ற உறுப்பினர்கள் மூலம் தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் என்றார்.

பின்னர், அலுவலக மேலாளர் ரவி மன்றத்தில் அனுமதி கோரி 22 தீர்மானங்களை வாசித்தார். அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்