அரியலூர் மாவட்டத்தில் ஊராட் சிக்கு சொந்தமான குளங்களில் மீன்வளத் துறை சார்பில் மீன் குஞ்சுகளை இருப்பு வைக்கும் திட்டம் நேற்று முன்தினம் தொடங்கி வைக்கப்பட்டது.
திருமானூரை அடுத்துள்ள கீழக்காவட்டாங்குறிச்சி மற்றும் அரண்மனைக்குறிச்சி கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந் திரன் கலந்துகொண்டு, குளத்தில் மீன்குஞ்சுகளை விட்டு, திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது, “கிராமப்புற மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும், மீன்குஞ்சுகளின் உற்பத்தியை அதிகரிக்கவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், கீழக்காவட் டாங்குறிச்சி, வெங்கனூர், கோவில் எசனை உட்பட 9 கிராமங்களில் உள்ள குளங்களில் தற்போது ரூ.9 லட்சம் மதிப்பில் பல்வேறு வகைகளைச் சேர்ந்த 50,000 மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளன” என்றார்.
நிகழ்ச்சிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் த.ரத்னா தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் முன்னிலை வகித் தார்.
கோட்டாட்சியர் ஜோதி, மீன்வள ஆய்வாளர் பார்த்திபன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago