மனிதநேய மக்கள் கட்சியின் களப் பணியாளர்களுக்கு பயிற்சி

By செய்திப்பிரிவு

மனிதநேய மக்கள் கட்சியின் களப் பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் பெரம்பலூரில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கட்சியின் நகர பொறுப்புக் குழுத் தலைவர் முஹம்மது சித்திக் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சுல்தான் மொய்தீன், செயலாளர் மீரா மொய்தீன், துணைச் செயலாளர் முகமது அனிபா, இளைஞரணி மாவட்டச் செயலாளர் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரஷீத் அஹமது வரவேற்றார்.

சமூகநீதி படைப்பாளர் சங்க மாநிலச் செயலாளர் தாஹிர் பாட்சா, நதிகள் பாதுகாப்பு கூட்டியக்க மாநில அமைப்பாளர் தமிழகன், இஸ்லாமிய அழைப்பாளர் நாசர் அலிகான், பகுஜன் சமாஜ் மாநிலச் செயலாளர் காமராசு ஆகியோர், களப் பணியாளர்களுக்கு பயிற்சியளித்தனர்.

இந்நிகழ்ச்சியில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடு வது. பிப்.2-ம் தேதி திருச்சியில் நடைபெறும் மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய மண்டல பொதுக்குழுவில் தவறாமல் பங்கேற்பது.

மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைக்கும் பிரச்சார இயக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவது. பெரம்பலூர் மாவட்டம் உருவாகி 25 ஆண்டுகள் ஆகியும் டவுன் காஜி நியமிக்கப்படாமல் இருப்பதைக் கண்டித்து, விரைவில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என்பன உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்