அரக்கோணம் - சேலம் பயணிகள் ரயிலை ஆவடி வரை நீட்டிக்க பயணிகள் கோரிக்கை

அரக்கோணத்தில் இருந்து சேலத்துக்கு வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. அதிகாலை 5.15 மணிக்கு அரக்கோணத்தில் புறப்பட்டு காலை 10.50 மணிக்கு சேலம் சென்றடையும் இந்த ரயில், மறுமார்க்கத்தில் சேலத்தில் பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்பட்டுஇரவு 9.10 மணிக்கு அரக்கோணம் வந்தடையும். அதிகாலையில் புறப்படுவதால் இந்த ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

மேலும், இந்த ரயிலை ஆவடி,திருவள்ளூர் பயணிகள் பயன்படுத்த முடியவில்லை. எனவே ஆவடி வரை நீட்டித்தால் ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருவள்ளூர் பயணிகள் பயனடைவர். இந்த ரயிலை ஆவடியில் இருந்து காலை 6 மணிக்கு இயக்கினால் பயணிகள் அதிகளவில் பயன்படுத்துவர். மேலும், அன்னணூரில் ரயில்வே பணிமனை உள்ளதால், தினசரி இந்த ரயிலுக்குரிய பராமரிப்பு பணிகளையும் எளிதாக மேற்கொள்ளலாம். எனவே, அரக்கோணம் - சேலம் பயணிகள் ரயிலைஆவடி வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE