காரைக்குடி, கழனிவாசல், நேமத்தான்பட்டி, கானாடுகாத்தான், பள்ளத்தூர், கொத்தரி, மணச்சை, வடகுடி, காரியபட்டி, கண்டனூர், பாளையூர், வேலங்குடி, கோட்டையூர், ஒ.சிறுவயல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பாளைய நாட்டார்கள் ஆண்டுதோறும் காவடி எடுத்து பழநிக்கு பாதயாத்திரை செல்வர்.
இதில் 200-க்கும் மேற்பட்டோர் காவடி எடுத்துச் செல்வது வழக்கம். இந்தாண்டு கரோனாவால் பாதயாத்திரை செல்லும், அனைவரும் காவடி எடுக்கவில்லை. பாரம்பரியம் மாறாமல் இருக்க மணச்சை குருசாமி முருகுசோலை, சண்முகசேவா சங்கத் தலைவர் சுப்புராமன் தலைமையில் வேல் காவடி, மயில் காவடி, பச்சைக் காவடி ஆகிய 3 காவடிகள் மட்டுமே எடுத்து செல்கின்றனர்.
ஜன.21-ம் தேதி பள்ளத்தூரில் இருந்து புறப்பட்டு குன்றக்குடியை வந்தடைந்தனர். நேற்று காலை குன்றக்குடி மலையில் சண்முகநாதர் சுவாமி சன்னதியில் தரிசனம் செய்து விட்டு, பாதயாத்திரையைத் தொடர்ந்தனர். பிள்ளையார்பட்டி, வைரவன்பட்டி வழியாக திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயிலை அடைந்தனர். அங்கு வேலுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காரையூர், சிங்கம்புணரி, கொட்டாம்பட்டி, நத்தம், திண்டுக்கல் வழியாக பழநி செல்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago