போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

ராமநாதபுரத்தில் போலி சான்றிதழ் கொடுத்து தனியார் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக இருப்பவர் எஸ்.பாண்டியன். இவர் பணியில் சேரும்போது அளித்த 1994-ம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் சில பாட மதிப்பெண்கள் மீது கல்வித் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநரகத்துக்கு அவரது சான்றிதழை அனுப்பி சரிபார்த்தனர். அப்போது சான்றிதழில் ஆங்கில மதிப்பெண் மாற்றி பதியப்பட்டு போலியாக சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, போலி சான்றிதழை பயன்படுத்தி ஆசிரியர் பணியில் கடந்த 2018-ம் ஆண்டு பாண்டியன் சேர்ந்ததாக ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்