'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் திருவாரூர் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் எம்.பி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு மற்றும் திமுகவினர் பங்கேற்றனர்.
திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தபின் பொதுமக்களிடையே தயாநிதிமாறன் கலந்துரையாடினார். தொடர்ந்து, காட்டூரில் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், செய்தியாளர்களிடம் தயாநிதி மாறன் கூறியது: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவை தமிழக மக்கள் நிராகரித்து விட்டனர். சட்டப்பேரவைத் தேர்தலிலும் இது தொடரும்.
7 பேர் விடுதலையில் தேவையற்ற தாமதம் நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே திமுக சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஏதோ ஒரு காரணத்துக்காக ஆளுநர் தாமதிக்கிறார். ஆளுநர் என்பவர் மத்திய அரசின் பிரதிநிதி. ஆளுநர் எந்த முடிவு எடுத்தாலும், அது மத்திய அரசின் முடிவு தான். பாஜக அரசு 7 பேரை விடுதலை செய்யக் கூடாது என்ற முடிவில் இருக்கிறது எனத் தோன்றுகிறது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago