திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் திரளான பக்தர்கள் தரிசனம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி என்று பெயர் வரக்காரணமாக அமைந்த நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் வைபவம் அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் நேற்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இக்கோயிலில் தைப்பூச தீர்த்த வாரி திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான விழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் வீதியுலா நடைபெறுகிறது. விழாவில் 4-ம் நாளான நேற்று சுவாமி சன்னதியில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் வைபவம் நடைபெற்றது.

இறைவனின் திருவிளையாடலை சித்தரிக்கும் விதமாக சுவாமி சன்னதியில் நடைபெற்ற நெல்லுக்கு வேலியிட்ட வைபவத்தில் தருமபுரம் கட்டளை தம்பிரான் திருஞானசம்பந்தர் சுவாமிகள் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இரவில் சுவாமி, அம்மன், பஞ்சமூர்த்திகள் ரதவீதி உலா நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்