திருநெல்வேலி விதைப் பரிசோதனை அலுவலர் ஜா.ரெனால்டா ரமணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி விதைப்பரிசோதனை நிலையத்தில் விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு முளைப்புத்திறன் கண்டறிந்து இணையதளம் மூலம் ஆய்வு முடிவு வழங்கப்படுகிறது. நெல் விதைகள் 14 நாட்களும், உளுந்து 7 நாட்களும், பாசிப் பயிறு 8 நாட்களும், பருத்தி 12 நாட்களும் பராமரிக்கப்பட்டு முளைப்புத்திறன் கணக்கிடப் படுகிறது.
கணக்கீட்டின்போது செடியின்வேர், இலை போன்றவற்றின் வளர்ச்சி அடிப்படையில் இயல்பான நாற்றுகள், இயல்பற்ற நாற்றுகள், கடின விதை கணக்கீடு செய்யப்படுகிறது. எனவே, விவசாயிகள் தங்கள் பயன்பாட்டுக்கென வைத்திருக்கும் விதைகளை திருநெல்வேலி விதை பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பி ஒரு மாதிரிக்கு ரூ.30 கட்டணம் செலுத்தி முளைப்புத்திறன் அறிந்து பயன்படுத்தலாம் என்று தெரி வித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago