தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், மண்டல போராட்ட ஆயத்த மாநாடு தி.மலையில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ஜோதி சங்கர் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பழனியம்மாள் தொடக்க உரையாற்றினார். மாநாட்டில், “ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு துறையில் உள்ள 4.5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து துறை ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும், காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்” என்பன உள்ளிட்ட13 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், மதுரையில் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ள மாநில அளவிலான ஆயத்த மாநாடு மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலை நகரங்களில் வரும் பிப்ரவரி 2-ம் தேதி நடைபெறவுள்ள தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
முடிவில், மாநிலப் பொருளாளர் பாஸ்கரன் நிறைவுரையாற்றினார். இதில், திருவண்ணா மலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago