திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் பிற்படுத்தப்பட்டோர் துறை இயக்குநர் சுரேஷ்குமார் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் சிறுபான்மையின ருக்கான அரசின் நலத்திட்டங்களை விரைவாக செயல்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் முன்னிலை வகித் தார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை இயக்கு நர் சுரேஷ்குமார் தலைமை வகித்து பேசும்போது, "சிறுபான்மையி னருக்கு அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகி றது. இக்கூ்டத்தில் கலந்துகொண்ட சிறுபான்மையின மதத்தலைவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள். அதன்படி அடையாள அட்டைகள் வழங்கவும், 50 சதவீதம் மானியத்தில் இரு சக்கர வாகனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

டாம்கோ வங்கி கடனுதவி பெற ரூ.50 கோடி நிதியுதவி ஒதுக்கப் பட்டுள்ளது. சிறுபான்மையினர் இதை முறையாக பெற்று தொழில் நடத்த முன்வரவேண்டும். அதேபோல, இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் கல்லறை அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கிறிஸ்தவ கல்லறை மற்றும் முஸ்லிம் அகஸ்தலம் அமைக்க அரசு ரூ.1 கோடி வரை நிதி வழங்கி வந்தது. இந்த தொகை தற்போது ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மதத்தினர் தனியாருக்கு சொந்தமான நிலங்களை வாங்கி அவற்றை பயன்படுத்திக்கொள்ள அரசு நிதியுதவி வழங்க தயாராக உள்ளது.

சிறுபான்மையின மக்களுக்கு அரசு சார்பில் செய்யப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து சிறுபான்மையின மக்களுக்கு அரசு அலுவலர்கள், சிறுபான்மையின மதத்தலைவர்கள் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

இக்கூட்டத்தில் டிஆர்ஓ தங்கைய்யாபாண்டியன், மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் திருகுணஐயப்பத்துரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் (பொறுப்பு) அப்துல்முனீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்