சிங்கம்புணரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் 2015-ம் ஆண்டு சார்-பதிவாளராகப் பணிபுரிந்தவர் சூரியகலா (60). இவர் பணியின்போது ஏ.காளப்பூரைச் சேர்ந்த கம்பன் என்பவரிடம் பத்திரப்பதிவுக்கு ரூ.1,500 லஞ்சம் வாங்கும்போது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கை சிவகங்கை லஞ்சஒழிப்பு டிஎஸ்பி மணிமன்னன், எஸ்ஐ ராஜாமுகமது நடத்தி வந்தனர். இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி உதயபாலன், சார்-பதிவாளர் சூரியகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago