தூர் வாரியதாக பொய்க்கணக்கு எழுதியதே டெல்டாவில் பெய்யும் மழைநீர் வடியாமல் உள்ளதற்கு காரணம் என மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா குற்றஞ் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வரலாறு காணாத மார்கழி மாத மழையினால் டெல்டா பகுதிகளில் குறிப்பாக மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி இருக்கின்றன. உரிய நேரத்தில் வடிகால் வாய்க்கால்களை தூர் வாராமல், தூர் வாரியதாக வெறும் பொய்க் கணக்குகளை மட்டும் எழுதி வருகின்ற விவசாய விரோத அதிமுக அரசுதான் இந்த நிலைக்கு காரணம்.
பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாத அளவுக்கு டெல்டா விவசாயிகளின் நெற்பயிர் கள் தண்ணீரில் மூழ்கி கிடப்பது மிகுந்த வேதனைக்குரியது. அரசு அதிகாரிகள் உடனடியாக கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அறிவித்து அதை உடனடியாக வழங்க வேண்டும்.
பயிர்க் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசு உடனடியாக செய்ய வேண்டும். காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் விரைந்து கள ஆய்வு செய்து காப்பீட்டு தொகையை விடுவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago