மரக்காணம் அழகன்குப்பம் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க மக்களிடம் கருத்துக்கேட்பு

By செய்திப்பிரிவு

மரக்காணம் பக்கிங்காம் கால்வா யில் அழகன்குப்பம் பகுதியில் சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் ரூ. 261 கோடி மதிப்பில் மீன் பிடி துறை முகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான மீனவர் பொது மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம்விழுப்புரம் ஆட்சியர் அண்ணா துரை தலைமையில் நேற்று மரக்காணத்தில் நடந்தது.

இக்கூட்டத்தில் மரக்காணம்பகுதியில் உள்ள அழகன்குப்பம்,வசவன்குப்பம், கைப்பாணிகுப் பம், எக்கியர்குப்பம், மண்டவாய்புதுக்குப்பம், பனிச்சமேடுகுப்பம், அனுமந்தைகுப்பம், நொச்சிக்குப் பம், செட்டிநகர்குப்பம், கூனிமேடு குப்பம், அனிச்சங்குப்பம் உள்ளிட்ட 19 மீனவர் கிராமங்களைச் சேர்ந்த மீனவர் பஞ்சாயத்தார்கள், மீனவர் சங்க தலைவர்கள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.

மீனவர்களின் நலன் கருதி காலங்கடத்தாமல் மிக விரைவாக மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணியை அரசு தொடங்க வேண்டும் என்று கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், திண்டிவனம் சார்-ஆட்சியர் அனு, மரக்காணம் வட்டாட்சியர் உஷா மற்றும் மீன்வளத்துறையினர் கலந்துகொண்டனர்.

காலங்கடத்தாமல் மிக விரைவாக மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணியை அரசு தொடங்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்