திருவாரூர் மாவட்டத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களை நேற்று ஆட்சியர் வே.சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவாரூர் வட்டத்துக்குட்பட்ட பெருந்தரக்குடி, கூடூர், பாலை யூர், திருத்துறைப்பூண்டி வட்டத் துக்குட்பட்ட கச்சனம், திருத்து றைப்பூண்டி, கள்ளிக்குடி, கீழ பாண்டி ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், அண்மையில் பெய்த தொடர்மழை காரணமாக சாய்ந்து, நீரில் மூழ்கி உள்ளன. இவற்றை ஆட்சியர் வே.சாந்தா நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
பின்னர், ஆட்சியர் கூறியது:
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாரான நிலையிலிருந்த 36,213 ஹெக்டேர் பரப்பளவிலான நெற் பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள் ளன. சேதமடைந்த நெற்பயிர்களை வேளாண்மை துறையினர் கணக் கெடுத்து வருகின்றனர்.
மழைநீர் தேங்கியுள்ள வயல் களிலிருந்து மழைநீரை உடனடி யாக வெளி யேற்ற வேளாண்மை துறை அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
ஆய்வின்போது, வேளாண்மை துறை துணை இயக்குநர் உத்திராபதி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா, துணை வேளாண்மை அலுவலர் காத்தையன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago