திருப்பத்தூரில் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட ஏதுவாக ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுக்கு ஒரு ரூபாய் வழங்கப்படும் என நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் தெரிவித்தார்.
போகியன்று பழைய பொருட் களை தீ வைத்து எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவது அதிகரிக்கிறது. இதைத்தடுக்க போகியன்று பிளாஸ் டிக் கழிவுகளை எரிக்க வேண்டாம் என அரசு சார்பில் பல்வேறு வகை களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது. அதனடிப்படை யில், திருப்பத்தூர் நகராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளை கொடுப் பவர்களுக்கு ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் வழங்கும் திட்டம் இன்று (ஜன.13) ஒரு நாள் மட்டும் செயல்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் சத்திய நாதன் தலைமை வகித்தார். சுகாதார அலுவலர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். முன்னதாக சுகாதார ஆய்வாளர் விவேக் வரவேற்றார். இதில், நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் கூறும்போது, “பிளாஸ்டிக் கழிவு களை நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், சின்னகுளம் மாரியம்மன் கோயில் அருகே உள்ள மண்டல அலுவலகம், பகுதி 1-ல் உள்ள நூலகம், புதிய பேருந்து நிலையம் ஆகிய 7 இடங்களில் குப்பைக்கழிவுகளை பொதுமக்கள் வழங்கலாம்.
மறு சுழற்சிக்கு வழியில்லாத பிளாஸ்டிக் கவர்கள், பழைய காகித கழிவுகள், டயர்கள் போன்ற வற்றையும் இங்கு வழங்கலாம். ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் வீதத்தில் சன்மானம் வழங்கப்படும். இதனால், போகியன்று தேவை யில்லை என பொது இடத்தில் மக்கள் குப்பைகளை எரிப்பது தடுக்கப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago