வேலூருக்கு வரப்பெற்ற 42,100 டோஸ் கரோனா தடுப்பூசி மருந்து அண்டை மாவட்டங்களுக்கு விநியோகிக்க ஏற்பாடு

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்துக்கு வரப்பெற்ற 42,100 கரோனா தடுப்பூசி மருந்துகளை வேலூர் உள்ளிட்ட4 மாவட்டங்களுக்கு பிரித்து விநியோகம் செய்யப்படவுள்ளது.

இந்தியா முழுவதும் விரைவில் கரோனா தடுப்பு மருந்து பயன் பாட்டுக்கு கொண்டு வரப்படவுள் ளது. முதற் கட்டமாக ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ தடுப்பூசிமருந்துகளை முன்களப் பணியாளர் களுக்கு செலுத்த மத்திய அரசுஅனுமதி அளித்துள்ளது. முன்ன தாக தமிழகத்தில் கரோனா தடுப்பூசி மருந்து செலுத்துவதற்கான ஒத்திகை கடந்த வாரம் நடைபெற் றது. இதனைத் தொடர்ந்து, முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி மருந்து செலுத்தும் பணி வரும் 16-ம் தேதி தொடங்க உள்ளது.

இதற்காக சீரம் நிறுவனத்திடம் இருந்து 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 டோஸ் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிமருந்து சென்னை வந்து சேர்ந்துள் ளது. இவற்றை மண்டலம் வாரியாக பிரித்து அனுப்பி வைக்கும் பணி நேற்று நடைபெற்றது. சென்னை, வேலூர் உள்ளிட்ட 10 மாநகரங்கள் மண்டல அளவில் கரோனா தடுப்பூசி மருந்தை இருப்பு வைக்கும் மையமாக அனுமதித்துள்ளனர். இதில், வேலூர் மண்டலத்துக்கு 42 ஆயிரத்து 100 டோஸ் தடுப்பூசி நேற்று நள்ளிரவு வரப்பெற்றுள்ளது. குளிர்சாதன வசதி கொண்ட கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ள கரோனா தடுப்பூசி மருந்து களை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் தி.மலை மாவட்டத்துக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.

இவற்றில் வேலூர் மாவட்டத் துக்கு 18,600 டோஸ், ராணிப் பேட்டை மாவட்டத்துக்கு 4,400 டோஸ், திருப்பத்தூர் மாவட்டத் துக்கு 4,700 டோஸ், தி.மலை மாவட்டத்துக்கு 14,400 டோஸ் தடுப்பூசி மருந்துகளை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். அரசு உத்தரவிட்டதும் தேர்வு செய்யப்பட்ட முன்கள பணியாளர் களுக்கு தடுப்பூசி மருந்து செலுத் தும் பணி நடைபெறும் என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்