செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2-வது நாளாக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் கரும்பு அரவை முடங்கியதால் விவசாயிகள் வேதனை

By செய்திப்பிரிவு

செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2-வது நாளாக தொழிலாளர்கள் நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஈட்டிய விடுப்பு தொகையை (2019-20-ம் ஆண்டு) வழங்கவில்லை எனக் கூறி பணியை புறக்கணித்து நேற்று முன்தினம் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். அவர்களுடன், ஆலை நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், 2-வது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது.

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, “தொழிலாளர் களுக்கு ஈட்டிய விடுப்பு சுமார் ரூ.15 லட்சம் வரை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும். அந்த தொகையை வழங்காமல் தாமதப் படுத்தி வருகின்றனர். இது குறித்து பலமுறை வலியுறுத்தியும் வழங்க வில்லை. எங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை உடனடி யாக வழங்கவில்லை என்றால் போராட்டம் தொடரும்” என்றனர்.

தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஆலையில் நாளொன்றுக்கு சுமார் 2,500 டன் கரும்பு அரவை பாதிக்கப்பட்டுள் ளது. இதனால், 150 லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன. அந்த லாரிகளில் கொண்டு வரப்பட்ட சுமார் 1,500 டன் கரும்புகள் அரவைக்காக காத்திருக்கின்றன. ஒரு சில லாரிகளில் உள்ள கரும்பு கள் காய்ந்து, எடை குறையும் நிலையில் உள்ளது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந் துள்ளனர். அவர்கள் கூறும்போது, தொழிலாளர்களுடன் ஆலை நிர்வா கம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்