நீலகிரி மலைப் பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என நீலகிரி உருளைக்கிழங்கு, காய்கறி உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இச்சங்கத்தின் 23-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் உதகையில் நடைபெற்றது. சங்கத்தின் முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.இக்கூட்டத்தில், வெள்ளைப்பூண்டின் பிறப்பிடமாகவும், மருத்துவ குணம் கொண்டதாகவும் விளங்கும் நீலகிரி மலைப் பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்கவேண்டும். விவசாயப் பணிகளுக்குஆட்கள் பற்றாக்குறையாக இருப்பதால் விவசாயம் செய்யவும், அறுவடை செய்யவும், தோட்டத்தை மீண்டும் பதப்படுத்தவும் அதிக காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, பொக்லைன் இயந்திர வாகனங்களைப் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் உடனடியாக அனுமதி தர வேண்டும்.
விவசாய நீர் சேமிப்பு அவசியம்என்பதால் நீர்த்தேக்கத் தொட்டிகள்,பண்ணைக் குட்டைகளை அதிக அளவில் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தோட்டக் கலைத் துறை முன்கூட்டியே கால விரயமின்றி அதிக அளவில் அனுமதி தர வேண்டும். தடுப்பணைகளை உடனடியாகத் தூர் வாருவதோடு, தூர்வாரப்பட்ட மண்ணை விவசாயிகள் எடுத்துச் செல்லவும் அனுமதிக்க வேண்டும். வன விலங்குகளால் ஏற்படும் தொல்லைகள், நஷ்டங்களுக்கு தற்போது வழங்கப்படும் நஷ்டஈட்டுத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும். நீலகிரியில் கிராமங்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் செல்லும் சாலைகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சங்கத் தலைவர் ரங்கசாமி, செயலாளர் பாபு, துணைச் செயலாளர் கோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago