தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்க அழைப்பு

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "வரும் 2021-2022-ம் கல்வி ஆண்டுக்கு 2021-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், தொடர் அங்கீகாரம் பெறுதல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் மற்றும் தொழிற் பிரிவுகளில் கூடுதல்அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணைய தள விண்ணப்பத்தை சமர்ப்பித்தால்போதுமானது. விண்ணப்பிக்க உள்ள அனைத்து தொழிற்பிரிவு கள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத் தும் ஒரு விண்ணப்பத்தில் மட்டுமேஅளிக்க வேண்டும். NEFT மூலமாக தொழிற்பள்ளி கட்டணம்(விண்ணப்பக் கட்டணம் மற்றும்ஆய்வுக் கட்டணம்) செலுத்தும் போது, தொழிற்பள்ளியின் வங்கிக் கணக்கில் இருந்து மாற்றம் செய்யப்பட வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும்ஆய்வுக்கட்டணம் எந்த தொழிற்பள்ளிக்காக செலுத்தப்பட்டுள்ளது என்பதை, வங்கி ஸ்டேட்மெண்டில் கண்டறிய ஏதுவாக தாளாளர் பெயரில் உள்ள வங்கி கணக்கிலிருந்து RTGS/NEFT மூலமாக செலுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிற்பிரிவுக்கும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம், ஆய்வுக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் ஆகியவை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப் பிக்கஏப்ரல் 30-ம் தேதி கடைசி நாளாகும். அதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மேலும் விவரங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம். கோவையில் உள்ள மண்டல பயிற்சி இணை இயக்குநர்அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்