மொழி அழிப்பில் மத்திய அரசு ஈடுபடுகிறது என கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ குற்றம் சாட்டினார்.
திருப்பத்தூர் அருகே காரை யூரில் திமுக மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் சண்முகவடிவேல் தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் செந்தமிழ்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ பேசியதாவது: ஜெயலலிதா, சசிகலாவுக்குத் துரோகம் செய்த வர்களே தற்போது ஆட்சியில் உள்ளனர். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன் என்னாச்சு?. இந்த ஆட்சியில் மத்திய அரசு உதவியுடன் நீதித் துறை செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந் துள்ளது. டாஸ்மாக் மூலம் மாநில அரசும், பெட்ரோல், டீசலால் மத்திய அரசும் இயங்கிக் கொண் டிருக்கிறது.
மின்சாரக் கட்டணம் உயர்வுக்கு மத்திய அரசே காரணம். மேலும் மொழி அழிப்பில் மத்திய அரசு ஈடுபடுகிறது. திமுக ஆட்சியில் ரூ.1 லட்சம் கோடியாக இருந்த கடன் தற்போது ரூ.5 லட்சம் கோடி யாக உயர்ந்துள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago