இன்று முதல் 14-ம் தேதி வரை சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி

By செய்திப்பிரிவு

விருதுநகர்- மதுரை மாவட்ட எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ளது சதுரகிரி மலை. அமாவாசை, பவுர்ணமி மற்றும் அதனை ஒட்டிய 3 நாட்கள் மட்டுமே சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மார்கழிப் பிரதோஷம், பொங்கல் பண்டிகை ஆகியவற்றையொட்டி இன்று (ஜன.10) முதல் 14-ம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள். மேலும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்