தமிழக முதல்வர் வேட்பாளராக தற் போதைய முதல்வர் பழனிசாமியை ஏற்க பாஜக மறுப்பதாக கூறுவது தவறு என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்தார்.
புதுக்கோட்டை திலகர் திட லில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட அவர் பின்னர், செய்தியாளர்களிடம் கூறியது: ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மு.க.ஸ்டாலினுடன் விவா திக்க தயார் என முதல்வர் பழனி சாமி கூறிய பிறகு, அவருடன் விவாதிக்க வராமல் ஸ்டாலின் ஏன் நிபந்தனைகளை விதிக்க வேண் டும்?. தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் பழனிசாமியை ஏற்க மறுப்பதாக நாங்கள் கூறவில்லை. ஆனால், இது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கென்று ஒரு கொள்கை உள்ளது. அதன்படி, தலைமைதான் அறிவிக்கும் என்றார்.
முன்னதாக பொங்கல் விழாவில் அவர் பேசியபோது, “2020-ம் ஆண்டு மக்களுக்கு கஷ்டமான ஆண்டாக இருந்திருந்தாலும், 2021-ம் ஆண்டு சந்தோஷமான ஆண்டாக இருக்கும். தமிழகத்தில் எந்தப்பக்கம் போனாலும் தாமரை மலர்வது தெரிகிறது” என்றார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கட்சியின் மாவட்டத் தலைவர் ராம.சேதுபதி தலைமையிலானோர் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago