அருணை தமிழ் சங்க செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.
சங்கத் தலைவரும், முன்னாள்அமைச்சருமான எ.வ.வேலு தலைமை வகித்தார். கூட்டத்தில்,விருதுகளை பெற விண்ணப்பித் தவர்களின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில், ‘தமிழ் தொண்டாற்றும் திருவண்ணாமலை ஆசிரியர் கண்ணனுக்கு மறைமலை அடிகளார் விருது, பொது தொண்டாற்றும் திருவண்ணா மலை கண்ணகிக்கு டாக்டர் முத்து லட்சுமி விருது, கலை தொண் டாற்றும் சேத்துப்பட்டு வட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணனுக்கு என்எஸ்கே கலைவாணர் விருது, ஆன்மிக தொண்டாற்றும் செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராமத் தில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்திக்கு கிருபானந்த வாரியார் விருது’வழங்குவது என தீர்மானிக் கப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர் களுக்கு விருதுகள் மற்றும் பொற் கிழிகளை, திருவண்ணாமலை காந்தி நகர் புறவழிச் சாலையில் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ள அருணை தமிழ் சங்க தமிழர் திருநாள் விழாவில் வழங்கப்படும்.
கூட்டத்தில் துணைத் தலைவர் சுந்தரேசன், செயலாளர் ஆல்பர்ட், பொருளாளர் ஜமாலுதீன், முன்னாள் நகராட்சித் தலைவர் தரன், மருத்துவர் கம்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago