தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை முதல் இரவு வரை 14 இடங்களில் பிரச்சாரம் செய்கிறார். காலை 9 மணிக்கு பார்த்திபனூரில் உள்ள கே.எஸ்.டி. திருமண மஹாலில் அப்பகுதி முக்கியப் பிரமுகர்களை சந்தித்துப் பேசுகிறார். அங்கிருந்து பரமக்குடி வரும் அவர் லேனா திருமண மஹாலில் அதிமுக பிரமுகர்களுடன் ஆலோசனை செய்கிறார். அதையடுத்து ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பரமக்குடி நகரின் முக்கியப் பிரமுகர்களை சந்தித்துப் பேசுகிறார். பின்னர் பரமக்குடி பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் செய்கிறார். அதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு சத்திரக்குடியில் பிரச்சாரம் செய்கிறார்.
அங்கிருந்து ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள நிஷா மஹாலில் முதல்வர் மகளிர் சுய உதவிக் குழுவினரை சந்தித்துப் பேசுகிறார். தொடர்ந்து ராமநாதபுரம் டி பிளாக் பகுதியில் உள்ள ஏபிசி மஹால் மற்றும் அம்மா பூங்கா அருகே உள்ள ஜி.எஸ்.மஹாலில் முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு திரட்டுகிறார். அதன் பிறகு ராம நாதபுரம்-ராமேசுவரம் சாலையில் வாணி அருகே ஏஒன் மஹாலில் பிற்பகல் 3.30 மணிக்கு அதிமுக இளைஞர், இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில் நுட்பப் பிரிவினருடன் பேசுகிறார்.
பின்னர் கீழக்கரை செல்லும் முதல்வர் பழனிசாமி, முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மீனவர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்துப் பேசுகிறார். மாலை 6 மணிக்கு மேல் கடலாடி செல் லும் முதல்வர் அங்குள்ள தேவர் மஹாலில் அதிமுக பொறுப் பாளர்களை சந்தித்துப் பேசுகிறார். அங்கிருந்து சாயல்குடி சென்று பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இரவு 7.15 மணிக்கு நரிப்பையூரில் ஜெபமாலை மாதா கல்யாண மஹாலில் முக்கியப் பிரமுகர்களை சந்தித்துப் பேசுகிறார். இறுதியில் கன்னிராஜபுரத்தில் உள்ள தியாகி தர்மக்கன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பனை வெல்லத் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.
அதிமுக மாவட்டச் செயலர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் கட்சி நிர்வாகிகள் முதல்வரை வரவேற்க ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
மதுரை
முன்னதாக முதல்வர் பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை 6.30 மணிக்கு மதுரை வந்தார். விமான நிலையத்தில் முதல் வருக்கு, அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்எல்ஏ விவி.ராஜன் செல்லப்பா ஆகியோர் வரவேற்பு அளித்தனர். பின்னர் பெருங்குடி, அவனியாபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வழிநெடுக மேளதாளம் முழங்க அதிமுகவினர் வரவேற்றனர்.வரவேற்பு முடிந்த பிறகு முதல்வர் கே.பழனிசாமி மதுரை தல்லாகுளத்தில் உள்ள தனியார் விருந்தினர் இல்லத்தில் நேற்றிரவு தங்கினார். இன்று காலை அவர் ராமநாதபுரம் செல்கிறார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago