கார் மோதி பள்ளி ஊழியர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

தேனி பாரஸ்ட் ரோடு 12-வது தெருவைச் சேர்ந் தவர் கே.சரவணப்பாண்டியன் (50). தனியார் பள்ளியில் ஊழியராக பணிபுரிவதுடன் காலையில் நாளிதழ்களை விநியோகிக்கும் பணியையும் செய்து வந்தார்.

நேற்று அதிகாலை 4 மணிக்கு தேனியில் இருந்து போடிக்கு இருசக்கர வாகனத்தில் நாளிதழ்களை எடுத்துக்கொண்டு சென்றார்.

தேனி அருகே பழனிசெட்டிபட்டி தண்ணீர்தொட்டி அருகே சென்றபோது கம்பம் நோக்கிச் சென்ற கார் இவர் மீது மோதியது.

இதில் அதே இடத்தில் சரவணப்பாண்டியன் இறந்தார். பழனிசெட்டிபட்டி காவல் சார்பு ஆய்வாளர் யாழிசைச்செல்வன், கார் ஓட்டுநர் பாண்டி (26) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்