ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 58 மினி கிளினிக் தொடங்கப் படவுள்ளது. இதில் 24 இடங்களில் முதற்கட்டமாக மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:
மருத்துவ வசதி கிடைக்காத பகுதி மக்களுக்கு சிகிச்சையளிக்க அரசின் சார்பில் அம்மா மினி மருத்துவ கிளினிக் தொடங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 58 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக 24 இடங்களில் மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் பயன்பெறும் வகையில் ஒன்றியம் வாரியாக மினி மருத்துவ கிளினிக் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, அம்மாபேட்டை ஒன்றியத்தில் குப்பிச்சிபாளையம், குறிச்சி, பட்லூர் ஆகிய பகுதிகளிலும், அந்தியூர் ஒன்றியத்தில் பிரம்ம தேசம், பவானி ஊராட்சி தளவாய் பேட்டை மற்றும் வாய்க்கால் பாளையம், சென்னிமலை ஒன்றியத்தில் பெருந்துறை ஆர்.எஸ் பகுதியிலும் மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.
ஈரோடு ஒன்றியத்தில் காலிங்கராயன்பாளையம், ஈரோடு மாநகராட்சி பகுதியில் வீரப்பன்சத்திரம், சூளை ஆகிய பகுதிகளிலும், கோபியில் வெள்ளாங் கோவில், கே.மேட்டுப்பாளையம், எஸ்.கணபதிபாளையம், வேலன் காட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளிலும், இச்சிபாளையம், மொடக்குறிச்சி, வேலான்காட்டு வலசு (கஸ்பாபேட்டை), நம்பியூர் ஒன்றியத்தில் சாவக்காட்டுப் பாளையம், பெருந்துறை ஒன்றியத்தில் சின்னவீரசங்கிலி, விஜயமங்கலம், புன்செய் புளியம்பட்டி ஒன்றியத்தில் தொட்டம் பாளையம், மல்லியம்பட்டி, மாதம்பாளையம், டி.என்.பாளையத்தில் ஒடையக் கவுண்டன்பாளையம் ஆகிய இடங்களில் தற்போது மினி கிளினிக் மூலம் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago