கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 உழவர் உற்பத்தியாளர் குழுக் களுக்கு கரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்பு வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின்கீழ், கரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து, 6 உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பு மற்றும் உற்பத்தியாளர் குழுக் களுக்கு மானிய தொகைக்கான காசோலைகளை வழங்கினார். அதன்படி, பர்கூர் ஒன்றியத்தை சேர்ந்த 2 உற்பத்தியாளர் குழுக் களுக்கு தலா ரூ. 1.50 லட்சம் வீதம் ரூ. 3 லட்சம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 3 உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா ரூ. 1.50 லட்சம் வீதம் ரூ. 4.50 லட்சம், ஊத்தங்கரை ஒன்றியத்தில் இரண்டு உற்பத்தி யாளர் குழுக்களுக்கு தலா ரூ. 1.50 லட்சம் வீதம் ரூ. 3 லட்சம் என மொத்தம் 6 உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.10.50 லட்சம் மதிப்பு காசோலைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் உழவர் உற்பத்தி யாளர் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago