நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 3 ஆண்டுகளில் கஜா புயல், கரோனா தொற்று உள்ளிட்ட வற்றை எதிர்கொண்ட விவசாயி கள் நம்பிக்கையுடன் இருந்து வேளாண் உற்பத்தியை பல மடங்கு உயர்த்தி உள்ளனர். தற்போது நிவர் புயல், புரெவி புயலையும் எதிர்கொண்டுள்ளனர்.

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், விவசாயி களின் 4 கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை மட்டும் ஏற்றுக் கொள்வதாகவும், சட்டத்தை திரும்பப் பெற மாட்டோம் எனக் கூறி உள்ளதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றதாகும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்று, நாடாளுமன்றம், மாநில அரசுகள், மற்றும் விவசாயிகளிடம் கருத்து கேட்டு அதன்படி புதிய வேளாண் சட்டங்களை உருவாக்குவதே டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு தீர்வாகும்.

மேலும் நிவர் புயல் மற்றும் மழையால் பாதித்த பயிர்களுக்கு தமிழக அரசு விரைவாக நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிகழாண்டு தமிழக அரசு நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்