மக்கள் அரசியல் களம் நோக்கி வந்தால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் பெ.மணியரசன் கருத்து

By செய்திப்பிரிவு

காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் மன்னார்குடியில் நம்மாழ்வாரின் 7-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. திருவாரூர் கலைச்செல் வன் தலைமை வகித்தார். மருத்துவர் பாரதிச்செல்வன் நினைவேந் தல் உரையாற்றினார். மன்னார்குடி ஹரிஹரன் வரவேற்றார். ராஜ சேகரன் நன்றி கூறினார்.

இதில், சிறப்புரையாற்றிய காவிரி உரிமை மீட்புக் குழுத் தலைவர் பெ.மணியரசன் பேசியது: மத்திய, அரசின் புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளின் நெல்லை அரசு கொள்முதல் செய்யவில்லை எனில், எதிர்காலத்தில் ரேஷன் கடைகளின் நிலை கேள்விக்குறியாகிவிடும். இச்சட்டத்தின் மூலம் செயற்கையாக உணவு பொருட்கள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த முடியும். எனவே, நம்மாழ்வார் கூறியதைபோல, மக்கள் அரசியல் களம் நோக்கி வந்தால் மட்டுமே, தங்களை சுற்றி எழுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என்றார்.

நிகழ்ச்சியில், திருவாரூர் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் சாகுபடியில் ஈடுபட்டு வரும் 11 விவசாயிகளுக்கு ‘நம்ம ஊரு நம்மாழ்வார்' என்ற விருது வழங்கப்பட்டது. அரசுப்பள்ளி இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவப் படிப்பில் சேர்ந்த திருமக்கோட்டை அரசுப் பள்ளி மாணவி மோனிஷா, அவருக்குப் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் திரு மானூரில் நம்மாழ்வாரின் நினைவு நாளையொட்டி, பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் நேற்று முன்தினம் பொதுமக்க ளுக்கு கருப்புக்கவுனி அரிசி கஞ்சி, பானகம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், அகில இந்திய மக்கள் சேவை இயக்க மாநிலத் தலைவர் தங்க.சண்முகசுந்தரம், டெல்டா இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சச்சிதானந்தம், ஆசிரியர் மாரியப் பன், இயற்கை ஆர்வலர்கள் சண்முகம், ராபர்ட், சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன், சுயம்பிரகாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்