கட்டுப்பாடுகளுடன் குரூப் 1 தேர்வு நடத்த ஆலோசனை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 பதவிகளுக்கான போட்டித் தேர்வுகள் வரும் 3-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் 16 மையங்களில் 4501 தேர்வர்கள் பங்கேற்க உள்ளனர். இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், “தேர்வுக்கு முந்தைய நாளில் தேர்வு மையத்தை சுற்றிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும். அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். தேர்வர்களுக்கு இடையில் 6 அடி இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். தேர்வறைகளில் கிருமிநாசினி மற்றும் வெப்பநிலை கண்காணித்தல் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தேர்வு ஆவணங்களை விநியோகம் செய்யும்போது எச்சில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தேர்வர்கள் யாருக்கேனும் கரோனா தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு தெரிவிக்கப்பட வேண்டும். நோய் தொற்று அறிகுறிகள்உள்ள தேர்வர்கள் தேர்வெழுத விரும்பும் பட்சத்தில் தனி அறையில் தேர்வெழுத உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என ஆட்சியர் அறிவுறுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்