ஆரணியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிர மிப்புகள் நேற்று அகற்றப்பட்டன
தி.மலை மாவட்டம் ஆரணியில் உள்ள பிரதான வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தது. நிரந்தர கடை உரிமையாளர்களின் கடை விரிவாக்கம் மற்றும் சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். பாதசாரிகளும் தொடர் இன்னல்களை சந்தித்தனர். இதனால், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி, காவல்துறை பாது காப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற் றும் பணியில் நகராட்சி ஊழியர் கள் நேற்று ஈடுபட்டனர். புதிய பேருந்து நிலையம் பகுதி, மார்க்கெட் சாலை, காந்தி சாலை, மண்டி வீதி உட்பட பிரதான சாலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
தள்ளுவண்டிகள் மற்றும் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மீண்டும் ஆக்கிரமிப்பு நடைபெறாமல் இருக்க கண்காணிப்புப் பணியை நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago