திமுக எத்தனை வழக்குகளை தொடர்ந்தாலும் அதனை முறி யடித்து ரூ.2,500 பொங்கல் பரிசு வழங்கப்படும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் செஞ்சி, வல்லம்,மேல்மலையனூர் ஒன்றியங்களில் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமசந்திரன், முன்னாள் எம்பி ஏழுமலை, ஒன்றிய செயலாளர்கள் சோழன், கோவிந்தசாமி, விநாயக மூர்த்தி, புண்ணியமூர்த்தி மற்றும்ஆனந்தி அண்ணாதுரை உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியது:
அதிமுகவில் எல்லோருக்கும் மனக் கசப்பு இருக்கும். இதனை ஒதுக்கி வைத்து கட்சிப் பணியாற் றுங்கள். தேர்தல் முடிந்து மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்பு நாம் சண்டை போடலாம். விவாதம் செய்யலாம். அதிமுகவில் கிளை செயலாளருக்கு கூட பதவி கிடைக்கும். 2001-ம் ஆண்டு தேர்தலில் எடப்பாடி தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டதால், முதல்வர் பழனிசாமிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற் காக அவர் சோர்ந்து போகாமல் பாமக வேட்பாளர் வெற்றி பெற உழைத்தார். பின்பு மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு தற் போது முதல்வராக உள்ளார். இது போல திமுகவில் கனவுகூட காணமுடியாது.
அதிமுகவில் யார் வேண்டுமா னாலும் கனவு காணலாம். வருங்காலங்களில் அதிமுக இளைஞர் கள் கையில் செல்லும். அப் போது இன்றைய இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பு கிடைக் கும்.
பொங்கல் பரிசாக ரூ. 2,500 கொடுக்கக்கூடாது என்று திமுக வழக்கு தொடுத்துள்ளது. அதை உடைத்தெறிந்து பொங்கல் பரிசு வழங்கப்படும். இந்தியாவிலேயே தமிழகம்தான் கரோனா தொற்றை கட்டுப்படுத்தி, தற்போது தொற்றுஎண்ணிக்கையை 1000-க்கும்குறைவாக கொண்டு வந்துள் ளோம். ஆனாலும் பரிசோதனையை குறைக்கவில்லை. தினமும் 70 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து மறைந்த வல்லம் ஒன்றிய செய லாளர் அண்ணாதுரைக்கு ஒருநிமிடம் மவுன அஞ்சலி செலுத் தப்பட்டது.
வருங்காலங்களில் அதிமுக இளைஞர்கள் கையில் செல்லும். அப்போது இன்றைய இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago