கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பு:
சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை சார்பில் 2021ம் ஆண்டில் உலக மகளிர் தினத் தன்று ‘அவ்வையார் விருது’ வழங்கப்படுகிறது. விருதுக்கு விண்ணப்பிப்போர் தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்டவர்களாக, 18 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். சமூகநலனை சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் மொழி, இனம், பண்பாடு, கலை அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்காக தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணிபுரிபவர்களாக இருத்தல் வேண்டும். தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன் விவரம், விருதின் பெயர், யாரிடமிருந்து பெற்றது, பெற்ற வருடம்), சேவை பற்றிய செயல்முறை விளக்கம்புகைப்படங்களுடன், சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கை, சமூக சேவையாளரின், சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம்.சமூகப் பணியாளர் இருப்பிடத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று விண்ணப்பதாரர் சமர்ப்பிக்கும் கருத்துருக்களில் பெண்களின் முன்னேற்றத்திற்கான சேவை புரிந்த விவரங்களை ஒரு பக்க அளவில் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் `சாப்ட் காப்பி’ மற்றும் `ஹாட் காப்பி'களை சமர்ப்பிக்க வேண்டும்.
மாவட்ட சமூகநல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், செம்மண்டலம் ரோடு, கடலூர் என்ற விலாசத்தில் இன்றைக்குள் (டிச.31)சமர்ப்பித்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தினரும் இதே போல் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago