வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை

By செய்திப்பிரிவு

சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக அரசு அலுவலர் களுக்கான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர், தமிழ்நாடு செய்தித்தாள்கள் மற்றும் காகிதங்கள் துறை மேலாண்மை இயக்குநர் எஸ்.சிவசண்முகராஜா தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ஜனவரி 1-ம் தேதி 18 வயது பூர்த்தியாகும் மற்றும் வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் பதிவு செய்துகொள்ளாதவர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ள ஏதுவாக நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகள் நடைபெற்றது.

இப்பணியின்போது பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர் பான படிவங்கள் சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வரு கிறது. அவற்றின் மீது கள விசாரணை மேற்கொள்ளப் பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20-ம் தேதி வெளியிடப் படும், என தெரிவிக்கப் பட்டது.

வருவாய் கோட்டாட்சியர்கள் மு.கோட்டைக்குமார், ப.மணிராஜ், வட்டாட்சியர் (தேர்தல்) பா.சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்